ரூ.20 லட்சம் மோசடி:உதவி வருவாய் அலுவலர் மீது வழக்கு

ரூ.20 லட்சம் மோசடி:உதவி வருவாய் அலுவலர் மீது வழக்கு

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக உதவி வருவாய் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த புகாரில் அஸ்தம்பட்டி உதவி வருவாய் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த வரியை விதிக்காமல் குறைத்து வரி வசூல் செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் புகார்கள் தொடர்பாக விசாரணையை தொடங்கினார். அதில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகளுக்கு வரியை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியில் ஈடுபட்டதும்,

அந்த வகையில் கடந்த 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.20 லட்சத்து 47 ஆயிரத்து 547 வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வணிக வளாக கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு விதிக்கப்படும் வரியை வசூலித்து வந்ததும், காலிமனைகளுக்கு வரியை மாற்றி அமைத்து வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மாநகராட்சி அலுவலர் மீது வழக்கு இந்த நிலையில் அரசுக்கு ரூ.20 லட்சத்து 47 ஆயிரத்து 547-ஐ வருவாய் இழப்பு செய்து மோசடி செய்ததாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் முருகேசன் மீது தற்போது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மோசடியில் அவருடன் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முருகேசன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story