ரூ.25.50 லட்சம் மோசடி - மூவருக்கு 3 ஆண்டு சிறை

ரூ.25.50 லட்சம் மோசடி - மூவருக்கு 3 ஆண்டு சிறை

பைல் படம் 

மதுரவாயலில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தின் பேரில் வங்கி கடன் பெற்று மோசடி செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரவாயலைச் சேர்ந்த ரோசாரி ஜெசிந்தா, அமர்நாத், வேளச்சேரி சாரதி நகரைச் சேர்ந்த ரவிசந்திரன் ஆகியோர், வேளச்சேரி இந்திரா நகர் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள, 3,245 சதுர அடி நிலத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளனர். அவற்றை, கந்தசாமி என்பவரிடம் 25.50 லட்சம் ரூபாய் பெற்று கிரையம் செய்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து, கந்தசாமி கொடுத்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரோசாரி ஜெசிந்தா உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதற்கு முன், போலி ஆவணங்கள் வாயிலாக வங்கியில் கடன் பெற்று, திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்ல பாண்டியன், குற்றவாளிகள் ரோசாரி ஜெசிந்தா உள்ளிட்ட மூவருக்கும், தலா மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story