ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிய இஸ்லாமியர்கள்.
பள்ளப்பட்டியில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிய இஸ்லாமியர்கள்.
மூன்று லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய இஸ்லாமியர்கள். அண்மையில் பெய்த கனமழையால், தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு தங்களது உடைமைகளையும் இழந்து தவித்தனர். செய்தி மட்டும் ஊடகங்களில் இதனை கண்ட பொதுமக்கள் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களை சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வாழ்வாதாரத்துக்காக அனுப்பி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டியில் அதிகம் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டினை பள்ளப்பட்டி இணையதள பாப்புலர் எக்ஸ்பிரஸ் குழுவின் நண்பர்கள், குழுவின் அட்மின் பாப்புலர் அபுதாஹிர் தலைமையில் மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட பொருட்களை லாரிகள் ஏற்றி அனுப்பும் நிகழ்வு பள்ளி மாநகர் எக்ஸ்பிரஸ் அட்மின் சித்திக் முன்னிலையிலும், காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையிலும், பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி முதல்வர் இல்யாஸ், பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமா வழிகாட்டுதலுடன், அதன் தலைவர் கலீல் ரஹ்மான் அவர்கள் துவா செய்து அனுப்பப்பட்டது.
Next Story