பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4.75 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4.75 லட்சம் பறிமுதல்

பணம் ஒப்படைப்பு 

சேலம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.4.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவர் ரோடு காண்ட்ராக்ட் பணி செய்து வருகிறார். இவரிடம் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் சாலை அமைப்பதற்காக தார் வாங்குவதற்கு ராமசாமி ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிரகாஷ் தனது வீட்டிற்கு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த பிரகாஷின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிரகாஷிடம இருந்த ரூ. 4,75,000 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story