பாப்பினியில் பறக்கும் படை சோதனையில் ரூ 52,000 பறிமுதல்

பாப்பினியில் பறக்கும் படை சோதனையில் ரூ 52,000 பறிமுதல்

பாப்பினியில் பறக்கும்படையினரின் அதிரடி சோதனையில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பாப்பினியில் பறக்கும்படையினரின் அதிரடி சோதனையில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பாப்பினியில் முத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்த பரமசிவம் வயது 60 என்பவரிடம் இருந்து ரூ. 52 ஆயிரம் ரொக்க பணத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே தேர்தல் நடத்தைக்குட்பட்ட மதிப்பை விட தனிநபர் அதிகளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story