புளியறையில் ரூ5.32 லட்சம் பறிமுதல்
பறிமுதல்
தென்காசி புளியறையில் ரூ5.32 லட்சம் பறிமுதல் செய்தனா்.
தென்காசி மாவட்டம் புளியறை பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ 5.32 லட்சத்தை பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் ஜெயலெட்சுமி தலைமையில் தலைமைக் காவலா் ஆறுமுகம், காவலா் மாடசாமி ஆகியோா் அடங்கிய பறக்கும் படையினா் தென்காசி-அம்பாசமுத்திரம் பிரதானச் சாலை எல்லைப்புளி விலக்கில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தனியாா் நிறுவன ஊழியா் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ. 4 லட்சத்து 32 ஆயிரத்து 973-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்து, தென்காசி கோட்டாட்சியா் லாவண்யாவிடம் ஒப்படைத்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி தலைமையிலான பறக்கும் படையினா் புளியறை பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டதில், கேரள மாநிலம் ஆலப்புழாவை சோ்ந்த சஜீஷ் என்பவரிடம் ஆவணங்களற்ற ரூ. 1 லட்சம் கைப்பற்றப்பட்டு கடையநல்லூா் வட்டாட்சியா் சுடலைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story