பாபநாசத்தில் ரூ 60,406 பணம் பறிமுதல்
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ரூ. 60,406 பணம் பறிமுதல் செய்தனர்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ரூ. 60,406 பணம் பறிமுதல் செய்தனர்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரவீன் தலைமையிலான குழுவினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் மனைவி சிவசங்கரி என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது ரூ 60 ஆயிரத்து 406 பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரி பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தார் .அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தமயந்தி உடன் இருந்தனர்
Next Story