கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ. 68.67 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ. 68.67 லட்சத்திற்கு வர்த்தகம்

பைல் படம் 

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 68.67 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, எள் 650 மூட்டை, மக்காச்சோளம் 152, வேர்க்கடலை 50, உளுந்து 5, கம்பு 3 உட்பட 332 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 10,910, மக்காச்சோளம் 2,319, வேர்க்கடலை 8,754, உளுந்து 8,799, கம்பு 5,925 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 68 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 40 மூட்டை, எள் 35, கொள்ளு 3 உட்பட 78 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,318, எள் 10,603 கொள்ளு 4,670 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 லட்சத்து 57 ஆயிரத்து 669க்கு வர்த்தகம் நடந்தது.

தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 202 மூட்டை, எள் 26, உளுந்து 6, மக்காச்சோளம் 6, பச்சைப்பயிறு 1 மூட்டை உட்பட 241 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக நெல் 2,619, எள் 13,471, உளுந்து 9,240, மக்காச்சோளம் 2,052, பச்சைப்பயிறு 6,589 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 592 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags

Next Story