கடம்பூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.71,850 பறிமுதல்

கடம்பூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.71,850 பறிமுதல்

கடம்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.71 ஆயிரத்து 850ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடம்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.71 ஆயிரத்து 850ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி பேரவை தொகுதி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்பு குழு அலுவலருமான அனந்த லட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சை, தலைமை காவலர் ராஜாராம், காவலர் சமுத்திரக்கனி ஆகியோர் கடம்பூர்-கயத்தாறு சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 71 ஆயிரத்து 850 இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் பீடி விற்பனை செய்த பின் பணத்தை வசூல் செய்து வருவதாக கூறினர். இருப்பினும் அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லாததை யடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story