ரெயில் நிலைய அஞ்சலகத்தில் ரூ.7.51 லட்சம் மோசடி - 5 பேர் மீது வழக்கு
பைல் படம்
சேலம் ரெயில் நிலைய அஞ்சலகத்தில் பார்சல் அனுப்பியதில் ரூ. 7.51 லட்சம் மோசடிசெய்த 5 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பார்சல் அனுப்பும் அஞ்சலக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பார்சல் அனுப்பியது தொடர்பாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை தணிக்கை செய்யப்பட்டது. இதில் ஒரே நிறுவன பார்சல்களை அனுப்பியதில் அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 263 மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் பாலாஜி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பார்சல் அலுவலகத்தில் பணிபுரிந்த அனிதா குமாரி, சண்முகப்பிரியா, சக்தி, சுதர்சன், ராஜகோபால் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story