துறையூர் அருகே பறக்கும்படை அதிகாரிகளால் ரூ.77ஆயிரம் பணம் பறிமுதல்

துறையூர் அருகே பறக்கும்படை அதிகாரிகளால்  ரூ.77ஆயிரம் பணம் பறிமுதல்

பணம் பறிமுதல் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு வரப்பட்ட ரூ.77 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் கருப்பு கோவில் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மோட்டார் பைக்கில் வந்த வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் உரிய ஆவணங்களின்றி ரூ. 77 ஆயிரத்து 950 ரொக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை செய்ததில் துறையூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதும் வராக் கடனை வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உதவி தேர்தல் அலுவலர் குணசேகரனிடம். ஒப்படைத்தனர்.

பின்னர் பணத்தை துறையூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை ஒப்படைத்து தங்களது பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story