ரூ. 70 லட்சம் மதிப்பில் நூல்மோசடி செய்த கணவன் மனைவி மீது புகார்
நூற்பாலையில் ரூ. 70 லட்சம் மதிப்பில் நூல்மோசடி செய்த கணவன் மனைவி மீது புகார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர் ரெட்டியார்பட்டி சார்ந்தவர் தாமு. இவர் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் ஆலோசகராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் இந்த நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளையும் பார்த்து வருவதால், இவரிடம் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மணிவண்ணன் மற்றும் அவருடைய மனைவி சசிகலா ஆகிய இருவரும் அறிமுகம் ஆகியுள்ளனர் அவர்கள் தாமு பணிபுரியும் ஆலையிலிருந்து பல தவணைகளாக சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்களை வாங்கிக் கொண்டு விற்று தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மணிவண்ணன் மற்றும் அவருடைய மனைவி சசிகலா மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Tags
Next Story