ரூ. 4 லட்சத்துக்கு ஏலம் போன கொப்பரை தேங்காய்

ரூ. 4 லட்சத்துக்கு ஏலம் போன கொப்பரை தேங்காய்

கருங்கரடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 4 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது. 

கருங்கரடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 4 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

சங்ககிரி -ஓமலூர் பிரதான சாலையில், கொங்கணாபுரத்தை அடுத்த கருங்கரடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நிலக்கடலை, தேங்காய் கொப்பரைகள், உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த பொது ஏலத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தேங்காய் கோப்பரைகள் விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.8,110 முதல் ரூ.8,489 வரை விற்பனையானது. இதேபோல் 2-ம் ரக தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,040 முதல் ரூ.8,090 வரை விற்பனையானது. கடந்த சில வாரங்களாக தேங்காய் கொப்பரைகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story