சாலை விபத்தில் உதவி செய்யும் வீரருக்கு அரசு சார்பில் ரூ.10,000 வழங்கல்
மாவட்ட எஸ்பி
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு முதலில் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி உயிரைக்காப்பாற்ற உதவியாக இருக்கும் நற்கருணை வீரருக்கு 5000/- ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அத்தொகையானது 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் மேலும் அத்தகைய உதவி செய்யும் நற்கருணை வீரருக்கு அத்தொகையினை பெறுவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அரசுக்கு சிபாரிசு செய்யப்படும் என்பதையும் தெரிவித்தர்.
மேலும் முக்கிய தகவலாக இத்தகைய நற்செயலை செய்யும் நபர்களை அந்த சாலைவிபத்து வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் எந்தவித தொந்தரவும் செய்யமாட்டார்கள் என்றும் காவல்நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ அழைக்கமாட்டார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.