முகையூர் அருகே அரிசி வியாபாரியிடம் ரூ.13 லட்சம் பறிமுதல்
முகையூர் அருகே அரிசி வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும்படைரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி களும் அமலுக்கு வந்ததால், அரசியல் கட்சியினர் வாக்காளர்க ளுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநா தன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் டி.தேவனூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட் டதில், அந்த நபர் ரூ.13 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் டி.தேவனூரை சேர்ந்த அரிசி வியாபாரி கோகுல்(வயது 38) என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் தாசில்தார் மாரியாப்பிள்ளை, சமூக பாது காப்பு திட்ட தாசில்தார் காதர்அலி, தேர்தல் துணை தாசில்தார் ராஜா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.