ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்:

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்:

கோரிக்கை 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக கூடுதலாக ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமானதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு 15,000 என்றும் மானாவாரி விவசாயத்திற்கு ஏக்கருக்கு 8,500 எனும் அறிவித்துள்ளது. நிவாரணத் தொகையை அறிவிக்கப்பட்டு பல நாட்களாகியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மழை வெள்ள பாதிப்பிற்கு பின்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மழைவெள்ள பாதிப்பால் விவசாயிகள் முற்றிலுமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு போதாது, ஏக்கருக்கு 20,000 ரூபாய் என ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.45,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story