சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ரூ.29 ஆயிரம் திருட்டு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ரூ.29 ஆயிரம் திருட்டு

காவல் நிலையம் 

சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ரூ.29 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தியாகராஜர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜா (வயது 62). சம்பவத்தன்று சேலம் புதியபஸ் நிலையத்தில் ராசிபுரம் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் கோவிந்தராஜன் வைத்திருந்த ரூபாய் 13 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இதே போல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (40).

நேற்று இரவு 9 மணி அளவில் இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பெங்களூர் பஸ் நிறுத்தம் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்தை வாலிபர் திருடிக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story