ரூ.32 லட்சம் முறைகேடு; கலெக்டர் அதிரடி

கன்னிசேரியில் ரூ.32 லட்சம் முறைகேடு தொடர்பான புகாரில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரின் காசோலை பவரை பறித்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரிபுதூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சிறப்பு தணிக்கை செய்திட கோரி கடந்த 31.10.2022ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு தணிக்கை செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். பின்னர் நடந்த சிறப்பு தணிக்கையில், ஊராட்சியில் ரூ.32 லட்சம் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் செய்த ஊராட்சி தலைவர், மற்றும் துணைத்தலைவர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 31.1.2024க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர், துணைத்தலைவரின் செக்கில் கை பொழுத்து ஈடும் பவரை பறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து ஆட்சியரின் உத்தரவில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் இடையே ஒன்றுமையின்மையால் ஊராட்சி பணியாளர்களுக்கு மாதம்தோறும் கால தாமதமாக ஊதியம் வழங்குவதால் சிக்கல் ஏற்படுகிறது என்றும் அப்பகுதிகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறுவது தடைபடுகிறது என்றும் கூறப்படுகிறது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவரின் விளக்கம் அளித்தது ஏற்றுக்கொள்வதாக இல்லை எனவும், எனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி, ஊராட்சி நிர்வாகம் முடங்கும் நிலையை தடுக்க, பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஊராட்சிகள் சட்டப்படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, கன்னிசேரிபுதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி மற்றும் துணைத்தலைவர் கவிதா ஆகியோரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தார். மேலும், அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி மன்ற தலைவருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), துணைத்தலைவருக்கு பதிலாக மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கையொப்பமிடும் அதிகாரம் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூறுககையில் இது நாள் வரையிலும் அவ்ஊராட சி பகுதியான தியாகராஜபுரம், கன்னிசேரி, பகுதிகளில் வாறுகால் வசதிகள், தெருக்களில் பேவர் பிளாக் பகுதிக்கும் பணிகள் என எதுவும் நடைபெறவில்லை என்றும், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் போன்றவைகள் கவனிக்கப்படாமல் இடிந்து விழும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் இனிமேலாவது தங்கள் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story