பெரம்பலூரில் வாகன சோதனையில் ரூ.8.10லாட்சம் பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் ஒரு நபர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்படும் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும். குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் குளித்தலை அருகே உள்ள சிந்தலவாடி பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்ட போது, அந்த வழியாக காரைக்காலை சேர்ந்த வடிவேல்ராஜ் என்பவர் ஓட்டி வந்த கன்டெ்னர் லாரி தடுத்து சோதனை இட்டபோது, அதில் ரூ. 4,75,000 கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. எனவே அந்த பணத்தினை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், மருதூர் செக்போஸ்ட் அருகே சோதனையில் ஈடுபட்டபோது, திருச்சி சீனிவாசா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூபாய் ஒரு லட்சத்தையும், சின்ன ரெட்டிபட்டியில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம்,
புலியூர் அருகே மேற்கொண்ட சோதனையின் போது வேளாங்கண்ணியில் இருந்து சுற்றுலா செல்வதற்காக கேரளாவில் இருந்து வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ஸ்ரீஜித் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்தினை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பின்னர் அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளனர்.