ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர் பிரதமருக்கு கோரிக்கை
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் அதன் நிறுவனர், தலைவர் திரைப்பட நடிகர் கோபி காந்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது,
விவசாயிகள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள், அப்படிப்பட்டவர்களை அடிப்பது நாட்டுக்கே பேரழிவாகும், அவர்களின் குறள்களை எப்பொழுதும் உடனடியாக செவி கொடுத்து கேட்டு நிறைவேற்றினால்தான், அந்நாடும் நாட்டு மக்களும் முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மனிதர்கள் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளை காப்பது ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தின் கடமையாகும்.
அணு ஆயுதம், விண்வெளி ஆராய்ச்சி, தேவையற்ற கட்டடங்கள், பாலங்கள், வீண் செலவுகள் மற்றும் சுமார் பத்து, இருபது நபர்களுக்காக கார்ப்பரேட் நிறுவனத்தின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் அரசாங்கம், நாட்டுக்கே உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் கடன்களை ஏன்? தள்ளுபடி செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய கோபி காந்தி விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விவசாயிகள் யாரும் எந்த சூழலிலும் அகிம்சையை தவிர்த்து வன்முறையில் ஈடுபடாமல் பொறுமையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.