குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் ஊர்வலம்

குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
குமரியில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பதசஞ்சலன் என்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை தடை விதித்ததை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதன் அடிப்படையில் குமரி மாவட்டம், கருங்கல் அருகே மூசாரி சந்திப்பு பகுதியில் இருந்து பாலப்பள்ளம் வடக்கு பிடாகை வரை நேற்று மாலையில் நடைபெற்றது. காவி கொடி அணிவகுப்புடன் நடந்த இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான சுயம்சேவகர்கள் சீருடையுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் யோகா, சிலம்பாட்டம், உட்பட தற்காப்பு கலைகள் செய்து காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பொது கூட்ட சிறப்புரை நடைபெற்றது. மேற்கு மாவட்ட இணை தலைவர் ரெகு தலைமை வகித்தார். இது போன்று திக்கணம்கோடு பகுதியில் மாவட்ட தலைவர் ராஜாராம் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story