மதுராந்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் - பலத்த பாதுகாப்பு

மதுராந்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் - பலத்த பாதுகாப்பு
மதுராந்தகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் வளாகத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் துவங்கியது..விஷ்ணு மாயானந்தா மகராஜ் இந்த ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர் வலம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் ஏரி காத்த ராமர் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர்..மதுராந்தகம் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பிள்ளையார் கோயில் ரயில்வே ரோடு மருத்துவமனை ரோடு தேரடி வீதி வழியாக மீண்டும் ஏரி காத்த ராமர் கோவில் வளாகத்தை அடைந்தது..இந்த ஊர்வலத்திற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் மாடுகள் குறுக்கிட்டதால் அவற்றையும் காவல்துறையினர் ஒழுங்குப்படுத்தி அனுப்பினர். ஊர்வலத்தின் இறுதியாக ஏரி ராமர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுக் கூட்டத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

Tags

Next Story