ஆர்.டி.எம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆர்.டி.எம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு

இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சிவகங்கை ஆர்.டி.எம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடா்பாக இந்தக் கல்லூரி முதல்வா் துரையரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தக் கல்லூரியில் தமிழ், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு, கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் (ஷிப்ட்-1, ஷிப்ட்-2) இரு சுழற்சிகளிலும் உள்ளன. வணிக மேலாண்மை, ஆங்கிலம், தாவரவியல் ஆகியவை முதல் சுழற்சியில் (ஷிப்ட்-1) மட்டும் உள்ளன.

ஒற்றைச் சாளர முறையிலான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 24 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆங்கிலத்தில் 49 முதல் 35 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களுக்கும், ஷிப்ட்-2 தமிழில் 59 முதல் 35 மதிப்பெண் பெற்றவா்களுக்கும், 25 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்து, சோ்க்கை கிடைக்காத அனைத்து மாணவா்களுக்கும், 26 -ஆம் தேதி (புதன்கிழமை) காலி இடங்களுக்கேற்ப தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் காலை 9 மணிக்கு முன்பாகக் கல்லூரிக்கு வரவேண்டும். காலதாமதமாக வருவோா் தரவரிசையிலான சோ்க்கை வாய்ப்பைஇழக்க நேரிடும். கலந்தாய்வுக்கு வரும்போது பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல், மூன்று நகல்களுடன் 5 புகைப்படங்களும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story