மழை குறைந்ததால் குமரியில் ரப்பர் பால் வெட்டும் பணி துவக்கம் 

மழை குறைந்ததால் குமரியில் ரப்பர் பால் வெட்டும் பணி துவக்கம் 

கன்னியாகுமரி சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் பணி கனமழையால் தடைபட்ட நிலையில், இன்று மீண்டும் துவங்கியது.  

கன்னியாகுமரி சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் பணி கனமழையால் தடைபட்ட நிலையில், இன்று மீண்டும் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சுமார் பத்து நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை ஒரு கிராமங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக அரசு ரப்பர் தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் தனியார் தோட்டங்களான வாழையத்துவயல் புதுக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் முற்றிலும் பாதிப்படைந்தது.

இதனால் ஆயிரக்கணக்கான ரப்பர் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் மழை குறைந்துள்ளது. இன்று மாவட்டத்தில் மழை இல்லை. இதன் காரணமாக கீரிப்பாறை, காளிகேசம் போன்ற அரசு ரப்பர் கழகத் தோட்டங்களிலும், வாழையத் துவயல், புதுகிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் ரப்பர் தோட்டங்களிலும் இன்று காலை முதல் ரப்பர் பால் வெட்டும் பணி தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரப்பர் பால் வட்டம் பணியை மீண்டும் தொடங்கினர்.

Tags

Next Story