கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் ருத்ர நாட்டிய அஞ்சலி
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆறாம் ஆண்டு ருத்ர நாட்டிய அஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவராத்திரியை ஒட்டி சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அபிநயா நண்கலை பரதநாட்டிய பயிற்சியகம் சார்பில் ருத்ர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்.
இதில் பெங்களூர் , சென்னை, கோயம்புத்தூர் , மைசூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து இருந்த நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை அரங்கேற்றினர். தொடர்ந்து கதக் , மோகினி ஆட்டம் , பரதநாட்டியம் , சிவதாண்டவம் , முயலகன் கதை உள்ளிட்ட நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.