தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது -ஆட்சியர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது -ஆட்சியர்
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 44 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 11,11,573 நபர்களும், பெண்கள் பதினோரு லட்சத்து 79 ஆயிரத்து 985 நபர்களும், 332 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 நபர்கள் வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களிக்கும் மையங்கள் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு,திருச்சி கிழக்கு, திருவரம்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என 6 இடங்களில் நடைபெறுகிறது.

பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 44 ஆயிரத்து 742 பேர் உள்ளனர். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது மாவட்ட முழுவதும் அரசியல் சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன என கூறினார்.

Tags

Next Story