காங்கிரஸ் கட்சியின் பக்ரீத் வாழ்த்து பேனர் கிழிப்பு

காங்கிரஸ் கட்சியின் பக்ரீத் வாழ்த்து பேனர் கிழிப்பு

புகார் அளிக்க வந்தவர்கள் 

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பக்ரீத் வாழ்த்து பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் பக்ரீத் திருநாளுக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 27 பேனர்கள் வைக்கப்பட்டன. இவற்றில் திருமாஞ்சோலை பகுதியில் வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐ.எம்.டி.யு.சி வாணியம்பாடி நகர தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் மணியரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் முசம்பில் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்கள் பேனரை கிழித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். வாணியம்பாடி 27 வது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட வாழ்த்து பேனர் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story