9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.16ல் ஊரக திறனாய்வு தேர்வு

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.16ல் ஊரக திறனாய்வு தேர்வு

திறனாய்வு தேர்வு

தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுதி தகுதி பெறுகின்றனர். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக நவம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் நவம்பர் 17 முதல் 28ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story