குருந்தன்கோடு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்திட்ட பணிகள்

குருந்தன்கோடு பகுதிகளில் ஊரக  வளர்ச்சித்திட்ட பணிகள்
ஊரக வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட குமரி கலெக்டர்
குருந்தன்கோடு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று நேரில் பார்வையிட்டு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று நேரில் பார்வையிட்டு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். குறிப்பாக ரூ.50.00 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் முதல் மணவிளை வரை தார்சாலை அமைக்கும் பணிகள் ரூ.15.00 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி அலுவலகம் முதல் சொசைட்டி சாலை வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொடுப்பைக்குழி பகுதியில் ரூ.14 இலட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடத்தையும், ரூ.9.86 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒட்டங்குளம் பகுதியில் ஓடைகள் தூர்வாரும் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணியாளர்களின் வருகை பதிவேட்டினைஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரூ.11.97 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள அங்கான்வாடி கட்டிடத்தையும் பார்வையிட்டதோடு, கட்டிடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வுகளில் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story