கிராமப்புற தொழில் முனைவோர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பயிற்சி

கிராமப்புற தொழில் முனைவோர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பயிற்சி

தொழில் முனைவோர் பயிற்சி

கரூர் மாவட்டம் ,கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரனூர் ஊராட்சி பகுதியில் உள்ள, கிராம சேவை மைய கட்டிடத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக மண்புழு தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், மாடு வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில் பயிற்சிகளை பயிற்சியாளர் லோகநாதன் கீரனூர் பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். பெரும்பாலும், தொழில் வாய்ப்பை பெறுவதற்காக கிராம மக்கள் நகரப் பகுதியை நோக்கி செல்கின்ற சூழலில், கிராமப் பகுதியிலேயே தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள், முறையாக பயிற்சியை முடித்த பிறகு தொழில் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, வங்கி கடனும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story