தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் GDS ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி Status/Pension உட்பட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும். 12,24,36 வருடங்கள் சேவையாற்றி வரும் Senior GDS ஊழியர்களுக்கு கூடுதல் இன்ங்கிரிமெண்ட் தந்து அதிகபட்ச Level சம்பளத்தை முன் தேதியிட்டு 1.1.2016 முதல் வழங்கப்படவேண்டும். குரூப் இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். 180 நாட்கள் வரை விடுப்பினை சேமித்து பணமாக்கும் வசதியினை ஏற்படுத்திட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்கம் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பலன்களுக்கான வசதியினை ஏற்படுத்திட வேண்டும். SDBS க்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை 3 % லிருந்து 10 % உயர்த்தி குறைந்த பட்ச Pension ரூ.5000/-மாக வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story