தஞ்சையில் கிராமிய சேவை திட்டம் தொடக்கம்
வேதாத்திரி மகரிஷியின் லட்சிய கனவான மனவளக்கலை யோகாவை கிராம மக்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பொருட்டு உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவை திட்டம் என்ற திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழா மாரியம்மன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. திட்ட இணை இயக்குனர் முத்து வரவேற்றார். எம்எல்ஏ நீலமேகம் தலைமை வகித்து பேசினார். ஊராட்சித் தலைவர் சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரண்யா, கவிதா, ஊராட்சி துணைத்தலைவர் சாகுல்ஹமீது, திட்ட செயலர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து பேசினார். திட்ட இயக்குனர் முருகானந்தம் அறிமுகவுரையாற்றினார். இதில் திட்ட துணைத் தலைவர் கைலாசம், தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவர் புருஷோத்தமன், மக்கள் தொடர்பு அலுவலர் வேதகுமரசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.