உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்க அலைமோதிய ௯ட்டம்

முகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வரும் நிலையில், ஆத்தூர் உழவர்சந்தையில் காய்கறிகளை வாங்க ௯ட்டம் அலைமோதியது.

நாளை மற்றும் நாளை மறுதினம் சுப முகூர்த்த தினத்தையோட்டி ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

185 விவசாயிகள் கொண்டு வந்த பூசணி காய்கள், பரங்கிகாய் , வாழைகாய், அவரை காய், முருங்கை , தேங்காய்கள், வாழை பழங்கள், இலைகள் , சாமந்திபூக்கள், மாலைகள் உள்ளிட்ட 51 டன் மதிப்பிலான 75 வகையான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர் பூக்கள், வாழை பழங்கள், வாழை இலைகள் மற்றும் காய்கறிகளையும் பொதுமக்கள் அதிகளவு வாங்கி சென்றனர்.

சுபமுகூர்த்த தினத்தையோட்டி காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்திருந்த நிலையில் தக்காளி, பீட்ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்களை அதிகளவில் வாங்கினர். மொத்தம் 21 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story