நீட் தேர்வை ரத்து செய்ய கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் நீர் தேர்வு மாநில கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாகவும்,சமூக நீதியை அழிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாகவும் எனவே நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.மேலும் நீட் தேர்வு தற்போதைய காலத்திற்கு ஏற்பட நவீன வர்ணாசிரமாக அமைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி,நீரோடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story