பாஜகவை அட்டாக் செய்த சு.வெங்கடேசன் எம்பி

பாஜகவை அட்டாக் செய்த சு.வெங்கடேசன் எம்பி

வெங்கடேசன் எம்பி

பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், பாபரைப் பற்றி பேசுவார்கள் என பாஜகவை சு வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்தார்.

பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், பாபரைப் பற்றி பேசுவார்கள்.. பாஜகவை அட்டாக் செய்த சு வெங்கடேசன் எம்பி நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள் என்றும்,

நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள் என்று மதுரை எம்பி சு வெங்கடேசன் பாஜவை விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த மாதம் 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

அன்றைய தினம் அவையின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து பிப்.1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து கடந்த 5 ஆம் தேதி பேசினார்.

தனது உரையின் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் காரசாரமான விவாதங்கள் அவையில் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் வார்த்தை யுத்தமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே மக்களவையில் பேசிய மதுரை லோக்சபா தொகுதி சு.வெங்கடேசன் ,

மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது:-சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள்.

அதேபோலத்தான் சில கட்சிகளும்... தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசினால் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள்,நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை.

2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story