சபரிமலை சீசன் - குமரி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை சீசன் - குமரி அம்மன் கோவிலில் தரிசன நேரம்  நீட்டிப்பு

குமரி அம்மன் 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

Tags

Next Story