விவேகானந்தா கேந்திராவில்  தியாகப் பெருஞ்சுவர் அமைப்பு 

விவேகானந்தா கேந்திராவில்  தியாகப் பெருஞ்சுவர் அமைப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்த்ராவில் முதல் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்த்ராவில் முதல் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த பாரத தேசத்தின் அனைத்து விடுதலை போராட்ட தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில், பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் சக்ரா விஷன் இந்திய அறக்கட்டளையின் சார்பாக தியாக பெருஞ்சுவர் (Tribute wall) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (19/03/2024) தமிழகத்தில் முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்த்ராவில் முதல் தியாக பெருஞ்சுவரின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய கல் பதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் சக்ரா விஷன் இந்திய அறக்கட்டளையின் நிறுவன தலைவரும், எழுத்தாளரும், பத்திரிகையாளரும், திரைப்பட இயக்குனருமானசக்ரா ராஜசேகர் ஜி அவர்கள் தலைமை வகித்தார். சக்ரா விஷன் இந்திய அறக்கட்டளையின் துணைத் தலைவரும், தொழிலதிபருமான பா.கோவர்த்தனன் ஜி முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விவேகானந்த கேந்த்ரா அகில பாரத தலைவர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் பதித்த கல்லை தியாக பெருஞ்சுவரில் முதலில் பதித்தார். தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் E.S.சகாயம் கலந்து கொண்டு தியாக பெருஞ்சுவரில் அநீதிகளுக்கெதிரான இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை., எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கிய மாவீரன் பகத் சிங் அன்னாரின் பெயர் பதித்த கல்லை பதித்தார். மேலும் நிகழ்வில் கலந்த கொண்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தார்கள், மாணவ மாணவியர் உட்பட பலர் தியாக பெருஞ்சுவரில் தியாகிகள் பெயர் கொண்ட கல்லை பதித்தார்கள்.

Tags

Next Story