பாதுகாப்பான தீபாவளி - மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி

பாதுகாப்பான தீபாவளி - மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி
தீயணைப்புதுறையினர் விழிப்புணர்வு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வேமங்கட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட எச்சரிக்கையாக பட்டாசு வெடிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க வேண்டும், புஸ்வானத்தை நேருக்கு நேராக நிற்காமல் பக்கவாட்டில் நின்று பற்ற வைக்க வேண்டும், தீப்புண் ஏற்பட்டால் எண்ணெயை தடவாமல் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் ,பட்டாசு வெடிக்கும் போது நைலான் ஆடைகளை தவிர்த்து விட்டு இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இந்தநிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, ஆசிரியர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story