விழுப்புரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பாதுகாப்பு
மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கை.
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கை அளிக்க கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வறட்சியால் ஏற்படும் குடி நீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

அந்த வகையில் வட்டார ஊராட்சிகளில் நிலுவைப்பணிகள் 70-ல் 53 பணிகளையும், ஊராட்சிகளில் நிலுவைப்பணிகள் 676-ல் 548 பணிகளையும், பொது நிதி (வட்டார ஊராட்சி) பணிகள் 92-ல் 67 பணிகளையும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

அந்த வகையில் வட்டார ஊராட்சிகளில் நிலுவைப்பணி கள் 70-ல் 53 பணிகளையும், ஊராட்சிகளில் நிலுவைப்பணிகள் 676-ல் 548 பணிகளையும், பொது நிதி (வட்டார ஊராட்சி) பணிகள் 92-ல் 67 பணிகளையும் விரைந்து செய்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் கோரி பள்ளி நிர்வாகக்குழு பரிந்துரை செய்துள்ள ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பது,

மேற்கூரை மற்றும் தரை பழுது பணிகள், சமையலறை, கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய குடிநீர் நிலுவைப்பணிகள் மறு சீராய்வு செய்து, செய்ய இயலாத பணிகள் ஏதும் இருப்பின் அவற்றை ரத்து செய்யவும் முன் மொழிவுகளை வருகிற 3-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் வினியோக ஆதாரங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொருட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏணிகளில் லேடர் லாக்கர் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், திறந்த நிலையில் உள்ள குடி நீர் ஆதாரங்களில் வலைமூடி அமைக்கும் பணியை மேற்கொள்ளவும்,

இப்பணிகளை எஸ்.சி., எஸ்.டி. பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் முன்னுரிமை வழங்கவும், அதற்கான ஜி.பி.எஸ். புகைப்பட ஆதாரங்களை ஆவணப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story