குமரி எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி யுவரஸ்கார் விருது

குமரி எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி யுவரஸ்கார் விருது

குமரி எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி யுவரஸ்கார் விருது 

திருக்கார்த்தியல் புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி யுவரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா கோல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி பிரிவில் திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கௌஷிக் வழங்கினார். தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த எழுத்தாளர் ராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தகுந்ததாகும்.

Tags

Next Story