சாய்பாபா ஆலயத்தில் வருசாபிஷேக விழா
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் எதிரில் அமைந்துள்ளது ஸ்ரீ மதுரம் சீரடி சாய்பாபா ஆலயம், இந்த ஆலயத்தில் 10ம் ஆண்டு வருசாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, கோவிலில் யாக வேள்வி உடன் நடைபெற்ற பூஜையை தொடர்ந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சிவன் கோவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளம் மற்றும் தப்பாட்டம் வான வெடியுடன் பெரம்பலூர் கடைவீதி, பழைய பேருந்து நிலையம் , காமராஜர் வளைவு, சங்கு, வெங்கடேசபுரம் , மதனகோபாலபுரம் பாலக்கரை, ஆகிய நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று சாய்பாபா கோவிலில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் முன்னதாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலில் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியையும், பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன்தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலில் சிறப்பு அபிஷேகம் சாய்பாபாவிற்கு நடைபெற்றது.
தொடர்ந்து சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரத்தையடுத்து தீபாரதனைநடைபெற்றது இதனை பக்தர்கள் கண்டு வணங்கி, தரிசனம் செய்தனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அஸ்வின் குழுமத்தின் தொழில் அதிபர் கணேசன், கோவில் நிர்வாக செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்டமுக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.