தேர்தலை காட்டி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் என புகார்

தேர்தலை காட்டி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் என புகார்
வெள்ளிக் கொலுசு பறிமுதல் என புகார்
ஆட்சியரை சந்தித்து வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு.

சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்க தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள் முனியப்பன், தனசேகர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், “சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொலுசு, நகை தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சேலம் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் சோதனை என்ற பெயரில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் பகுதிக்கு சென்று சோதனை செய்கின்றனர். அவ்வாறு சோதனை செய்யும் போது வெள்ளி கொலுசு மற்றும் அதனை சார்ந்த உற்பத்தி மூலப்பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

சேலம் வெள்ளி கொலுசு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாகவும், சேலத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. எனவே சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story