சம்பள பாக்கியை உடனே வழங்கணும் !

சம்பள பாக்கியை உடனே வழங்கணும் !

நூறு நாள் வேலைத் திட்டத்தில், சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில், சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நூறு நாள் வேலைத் திட்டத்தில், சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

புதன்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வ.ரவி தலைமை வகித்தார். வி.தொ.ச ஒன்றியக் குழு உறுப்பினர் கே.பாலமுருகன் முன்னிலை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே. பக்கிரிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 150 பெண்கள் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், "நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். சம்பளத்தை ரூ.650 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சம்பள பாக்கியை நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும். ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story