ஊதிய பிரச்சனை - நான் முதல்வன் திட்ட தன்னார்வலர்கள் மனு

ஊதிய பிரச்சனை - நான் முதல்வன் திட்ட தன்னார்வலர்கள்  மனு
மனு அளிக்க வந்த தன்னார்வலர்கள்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் சமூகவளம் அமைப்பில் பணிபுரிந்த நபர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்- 2 மாணவர்கள் உயர் கல்வி படிக்க தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், நான் முதல் வன் திட்டத்தை கொண்டு வந்தார். இதில் ஒரு பகுதியாக உயர் கல்வி வழிகாட்டல் உருவாக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு குழு அமைத்தனர். அந்த குழுவில், சமூகவளம் அமைப்பு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நபர் என மாற்று ஊடக மையம் மூலம் 3,200 பேர் தன்னார்வலராக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த மே மாதம் 9-ந் தேதி முதல் பணியில் சேர்ந்தனர். இதில் ஒரு நபருக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குப்பின் ரூ.7,500 எனக்கூறினர். தொடர்ந்து 4 மாத காலத்தில், நான் முதல்வன் திட்டப்பணி முடிவதாக தெரிவித்தனர். நாங்கள் ஊதியம் கேட்ட பின், முதல் தவணையாக போக்குவரத்து செலவுக்காக ரூ.ஆயிரமும், 2-வது தவணையாக ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கினர். மீதமுள்ள பணத்தை தற்போது வரை வழங்கவில்லை. நாங்கள், அந்த அமைப்பிடம் சென்று கேட்டால், கல்வித்துறை மீதும், மாற்று ஊடக மையத்தையும் காட்டுகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags

Next Story