பழனியில் தடையை மீறி இறைச்சிக் கடைகளில் விற்பனை
பழனியில் தடையை மீறி இறைச்சிக் கடைகளில் விற்பனை நடைபெற்றது.
பழனியில் தடையை மீறி இறைச்சிக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. புலால் உண்ணாமை கல்லுண்ணாமை மை வலியுறுத்திய திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனியில் உள்ள சில இறைச்சிக்கடைகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பழனி சஞ்சய் மருத்துவமனை அருகே உள்ள இறைச்சிக் கடையில் விற்பனை படுஜோராக நடந்தது.
இந்த அவலத்தை நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. புலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் போன் செய்த போதும் அதிகாரிகள் விரைவில் வருவோம் என்று ஆறுதல் வார்த்தையை கூறினர்.
Tags
Next Story