பொன்னமராவதியில் மண் கூஜாக்கள், மண் பானைகள் விற்பனை களை கட்டியுள்ளது
விற்பனைக்கு வந்த மண்பானைகள்
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொன்னமராவதியில் மண் கூஜாக்கள், மண் பானைகள் விற்பனை களை கட்டியுள்ளது. பொன்னமராவதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற் போல் மண்பாண்ட பொருட்கள், விளக்குகள், அடுப்புகள், சிலை கள்,
கொலு பொம்மைகள் போன்றவற்றை செய்து விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் வெயில் உக்கிரமாக அடிக்க தொடங்கியுள்ள நிலையில் பொது மக்கள் குளிர் பானங்களையும், இளநீர், பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றை வாங்கி பருக தொடங் கியுள்ளனர்.
ஆனால் பெரும்பாலான மக்கள் இயற்கையான பானங்களை அருந்திவருகின்றனர். அந்த வகையில் தண்ணீரை குளிர்விக்கும் மண் கூஜாக்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் பொன்னமராவ தியில் மண்பாண்ட தொழிலாளர்களின் கூஜாக்கள் மற்றும் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்துவருகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், கோடை வெயில் வாட்டுவதால் மண் கூஜாக்கள்,பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
பல்வேறு ஊர்களிலிருந்து வந்து மண் கூஜாக்கள், பானைகளை வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் மண் கூஜாக்கள், பானைகள் செய்யவும் ஆர்டர் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.