மறைமுக ஏலத்தில் வாழைத்தார் விற்பனை - வேளாண் விற்பனை குழு

மறைமுக ஏலத்தில் வாழைத்தார் விற்பனை - வேளாண் விற்பனை குழு
வாழைத்தார்
விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் வாழைத்தார் விற்பனை செய்யலாம் என்று வேளாண் விற்பனைக் குழு அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் 3,565 எக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பூதலூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மன்னார்சமுத்திரம், வளப்பக்குடி, தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் தஞ்சை விற்பனைக்குழுவின் பூதலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கட்டுப்பாட்டில் திருவையாறு அருகில் உள்ள மன்னார்சமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் வாழை பழுக்க வைக்கும் கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் வியாபாரிகளை வரவழைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். மேலும், பூதலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் தங்களது வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் வெளியூர் வணிகர்களை பங்குபெற செய்வதன் மூலம் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து தரப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பண்ணை வாயில் வர்த்தகம் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று விளை பொருட்களை விற்பனை செய்ய தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் வழிவகை செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து செலவு ஏற்றுக் கூலி மற்றும் இறக்குக்கூலி போன்ற செலவினங்கள தவிர்க்கப்படுவதால் விவசாயிகளின் விளைபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது. எனவே, தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் விளைபொருளை அதிக விலைக்கு விற்று முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story