தமிழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை

தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறையில் சித்திரைத் திருநாளை முன்னிட்டு 2024 ஏப்ரல் 15ஆம் நாள் முதல் மே 14ஆம் நாள் வரை ஒருமாத காலத்திற்குத், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டு நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நூல்கள் கிடைக்குமிடம்: பதிப்புத்துறை விற்பனைப் பிரிவு, வாகை வளாகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – 613010 கைபேசி எண்: +91 – 9489102276 மின்னஞ்சல் : [email protected] இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story