கள்ளச்சாராய விற்பனை - பெண்கள் உட்பட 5 பேர் கைது
கைது
நாகை பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சாராய பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல் துறையை நடத்திய அதிரடி சோதனையில் நாகை வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியில் சாராய விற்பனை செய்த மலர், செல்லூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த ராஜம், பேச்சம்மாள், நாகை கல்லாறு பகுதியில் சாராயம் விற்பனை செய்த வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த விஜயகுமார் உட்பட ஐந்து பேரை தனிபடை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது
Next Story