நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை: 16 பேர் கைது

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை: 16 பேர் கைது

அதிரடி சோதனை நடத்திய எஸ்பி

நாகை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் 16பேர் கைது செய்யப்பட்டு 50 மது பாட்டில்கள், 475 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சோதனை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் வெளிப்பாளையம்,

கீழையூர், கீழ்வேளூர்,தலைஞாயிறு, வேதாரணியம் ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 16 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களிடமிருந்து 50மது பாட்டில்கள் மற்றும் 475 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் இடையே உள்ள வாஞ்சூர் மதுவிலக்கு சோதனை சாவடி வால்மங்கலம் மதுவிலக்கு சோதனை சாவடியில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து சோதனை சாவடியில் உள்ள காவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதுடன், காவலர்கள் நல்ல முறையில் வாகன தணிக்கை ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் இது போன்ற கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்கள்.

Tags

Next Story